×

தொடர் மழை, தண்ணீர் திருட்டு குறைந்ததால் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: நீர்வளத்துறை ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது நீர்வளத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த பிறகும், அந்த மழைநீரை  சேமித்து வைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாததால் கடந்தாண்டு நூற்றுக்கணக்கான டிஎம்சி நீர் வீணாக கடலில் கலந்தது. அதேபோல தண்ணீர் திருட்டையும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், கடந்தாண்டு பருவமழை மழை கொட்டி தீர்த்த நிலையில், மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டமும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. குறிப்பாக, கடந்த வடகிழக்கு பருவமழை கால கட்டமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, நிலத்தடி நீர் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு, கட்டமைப்புகள் இல்லாத சூழல் ஒரு காரணமாக இருந்தாலும், குடிநீர், பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்துவதும் காரணம் என்று தெரிகிறது. இதனால், தற்போது எடுக்கப்பட்ட ஆய்வு முடிவின்படி மாநிலத்தில் 26 மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நீர்வளத்துறையின் அங்கமாக, நிலத்தடி நீர்வள ஆதார மையம்  மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

இதற்காக, 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கிணறுகளில் இருந்து, ஒவ்வொரு மாத இறுதியிலும் நிலத்தடி நீர் இருப்பு அளவு கணக்கிடப்பட்டன. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில், கடந்தாண்டை காட்டிலும் நிலத்தடி நீர்மட்டம் 26 மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி உட்பட 26 மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் காஞ்சிபுரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், ராமநாதபுரம் செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

Tags : Tamil Nadu , Groundwater level rises in 26 districts in Tamil Nadu due to continuous rains and reduced water theft: Information from the Water Resources Survey
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...