கலை ஆர்வத்தை மாணவர்கள் விடக்கூடாது: கனிமொழி எம்பி வேண்டுகோள்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், சென்னை போட்டோ பினாலே பவுண்டேஷன் மற்றும் சென்னை மேக்ஸ்முல்லர் பவன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி கதைகளின் நிலம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புகைப்படங்களை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் தூதர் கரின் ஸ்டோல், அரசு சுற்றுலாத்துறை செயலாளர் சந்தரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், கனிமொழி எம்.பி பேசியதாவது: புகைப்பட கண்காட்சி அதுவும் மாணவர்களின் இந்த புகைப்பட கண்காட்சியில் ஒவ்வொரு புகைப்படமும் வித்தியாசமாக உள்ளது. சரி புகைப்பட கண்காட்சி வைத்தாகிவிட்டது. நமக்கு படிப்பு இருக்கிறது வாழ்க்கை இருக்கிறது என்று இதிலிருந்து விலகி விடாமல் இதை  நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களோடு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் எல்லாராலும் இதை செய்ய முடியாது.சில பேருக்கு ஆர்வம் இருக்கிறது. அதை அழகாக வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பும் திறமையும் இருக்கிறது. எனவே எந்த கலை வடிவத்தையும் விட்டுவிடாதீர்கள். இவ்வாறு பேசினார்.

Related Stories: