நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய் அஞ்சலி

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு தென்னிந்திய நடிகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழ் நடிகர்கள் சிலர், கண்டீரவா ஸ்டுடியோவில் அமைந்துள்ள புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெங்களூரு சென்ற நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சமாதிக்கு தீபாராதனை காட்டி மலர்வளையம் வைத்தார். அவருடன் கர்நாடக மாநில விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் சென்றிருந்தனர்.

Related Stories: