×

மன அழுத்தம், புத்துணர்ச்சி பெற தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயற்கை இடர்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் பெரும் ஆபத்துகளிலிருந்து பொதுமக்களை மீட்பது, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும், யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் துணை கமாண்டன்ட் வைத்திலிங்கம் தலைமையில் மீட்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நேற்று ஒரே நேரத்தில் தியானம் மற்றும் யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.


Tags : National Disaster Rescue Force , Stress, Refreshment, Disaster Recovery, Force, Yoga
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...