பிரிட்டனில் நடைபெறும் கோப்ரா வாரியர் 2022 என்ற விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என அறிவிப்பு!!

டெல்லி : பிரிட்டனில் நடைபெறும் கோப்ரா வாரியர் 2022 என்ற விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் வட்டிங்டன் நகரில் வரும் மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோப்ரா வாரியர் என்ற பெயரில் போர் விமான பயிற்சி நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகள் பங்குபெற இருந்த இந்த பயிற்சியில், இந்தியாவும் பங்கேற்க இருந்தது. இதற்கான இந்திய விமானப்படையின் ஐந்து எல்சிஏ தேஜாஸ் போர் விமானங்கள் பிரிட்டன் செல்லவிருந்தன.

 இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில்,  கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து ரஷ்யா மீது பிரிட்டன் கடும் பொருளாதர தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டு வரும் நிலையில், பிரிட்டனில் நடைபெறும் போர் விமானப்பயிற்சியில் பங்கேற்பது ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிப்பது போல இருக்கும் என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து குறிப்பிடத்தக்கது.

Related Stories: