×

ஆண்டிமடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் தப்பி ஓட்டம்

ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ஆண்டிமடம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆண்டிமடம் மண்டல துணை தாசில்தார் செல்வத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், குவாகம் வருவாய் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்த போது அதில் சுமார் 7 யூனிட் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

டிப்பர் லாரியின் ஓட்டுநர் தொலைபேசியில் பேசிக்கொண்டு அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தன் காரணமாக அவரிடம் இருந்த கைபேசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், கள்ளத்தனமாக கிராவல் மண் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.டிப்பர் லாரி மற்றும் கைப்பற்றப்பட்ட கைபேசி ஆகியவற்றை லாரி டிரைவர் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். எஸ்ஐ நடேசன் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Andimadam , Antimatter, gravel soil, abducted, tipper truck
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது