×

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி: வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆப்சண்ட

நியூயார்க்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன.

15 உறுப்பினர்களை நாடுகளை கொண்ட இந்த கவுன்சிலில், தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானத்தை புறக்கணித்தன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளில் ஒன்றான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

முன்னதாக, தீர்மானத்தின் மீது பேசிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் நிலவும் சூழல் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலை அளிப்பதாக தெரிவித்தார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள், மற்றும் பொது மக்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவு, மீண்டும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றார். வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துவதாகவும், மனித உயிர்களை விலையாகக் கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்றார்.
               


Tags : U.N. ,Russia ,Ukraine ,UN ,Security Council ,India ,China , Ukraine, Russia, UN Security Council, India, China Apsanda
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி