×

சீமானின் சொந்த ஊரில் நாம் தமிழர் கட்சிக்கு 4 ஓட்டு தான்: 60% வார்டுகளில் ஒற்றை இலக்க வாக்குகள்

சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர். சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி இதில் 12 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் 1வது வார்டில் 6 வாக்குகள், 5வது வார்டில் 11 வாக்குகள், 7வது வார்டில் 5 வாக்குகள், 13வது வார்டில் 14 வாக்குகள், 14வது வார்டில் 15 வாக்குகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இதேபோல், 15வது வார்டில் 8 வாக்குகள், 17வது வார்டில் 4 வாக்குகள், 21வது வார்டில் 9 வாக்குகள், 22வது வார்டில் 23 வாக்குகள், 23வது வார்டில் 8 வாக்குகள், 26வது வார்டில் 9 வாக்குகள், 27வது வார்டில் 15 வாக்குகளை பெற்றுள்ளனர்.

27வது வார்டில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் குகன், வெறும் 15 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். மாவட்ட செயலாளர் கூட இரு இலக்கத்தை தாண்ட முடியவில்லை. மொத்தம் போட்டியிட்ட 12 வார்டுகளில், 7 வார்டுகளில் ஒற்றை இலக்கத்திலேயே வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுள்ளனர். அதாவது 60 சதவீத வார்டுகளில் ஒற்றை இலக்கத்தை பெற்றுள்ளனர். குறிப்பாக, 17வது வார்டு வேட்பாளர் வெறும் 4 வாக்குகளே பெற்றிருக்கிறார்.
சீமானின் சொந்த ஊரான அரணையூர்  ஊராட்சியில் திமுகவை சேர்ந்தவரே தலைவராக உள்ளார்.

இந்த ஊரின் அருகே உள்ள  இளையான்குடி பேரூராட்சியையும் திமுகவே கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.  பேரூராட்சியிலும் பரிதாபம் சீமானின் சொந்த ஊரான இளையான்குடி  பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களில்  போட்டியிட்டனர். இதில் ஐந்து இடங்களில் டெபாசிட் தொகையை இழந்தனர். சீமானின் கட்சி சொந்த ஊரிலேயே அடையாளம் இல்லாமல் தேய்ந்து வருகிறது என்பதை இத்தேர்தல் நிரூபித்து விட்டதாக அக்கட்சியினரே வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Seiman ,Tamil Party , Seeman, we are the Tamil Party, votes
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...