முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா ராகுல் காந்தி 28ம் தேதி தமிழகம் வருகை : ரமேஷ் சென்னிதாலா மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள, அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார். தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் நடைபெற்றது. காங்கிரஸ் சென்னை மாநகராட்சி தேர்தலில் 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் மேயர், துணை மேயர்,  நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக  தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில், வரும் 4ம் ேததி மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அது குறித்து விவாதிக்க காங்கிரஸ் மேலிட தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவர் நேற்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக வரும் 27ம் ேததி சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள், தேர்தல் பணிக்குழுவினர், மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ள கூடிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், வரும் 28ம் தேதி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். அவரது வருகை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய வரவேற்பு குறித்தும் நேற்று ரமேஷ் சென்னிதாலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வரும் 28ம் தேதி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் ராகுல் காந்தி சந்திக்கிறார்.

Related Stories: