நாளை காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிக்கை

காஞ்சிபுரம்: நாளை காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளதாக க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமையில் நடக்கிறது. மாவட்ட துணை செயலாளர்கள் வெளிகாடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, கட்சி வளர்ச்சி பணி மற்றும் ஆக்கப்பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: