×

மக்கள் தடுப்பூசிக்காக போராடும்போது டிவிட்டர் புளூ டிக்குக்காக போராடுகிறது மத்திய அரசு: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி:  டிவிட்டர் கணக்கை 6 மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது  கணக்கு முழுமை பெறாமல் இருந்தாலோ புளூ டிக்கினை அகற்றுவது டிவிட்டரின் கொள்கை முடிவு. இந்த விதிகளின்படி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் டிவிட்டர் கணக்குகளில் இருந்த புளு டிக்கை நேற்று முன்தினம் டிவிட்டர் அகற்றியது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததும், மீண்டும் அவர்களுக்கு புளு டிக் அளிக்கப்பட்டது, இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாட்டு மக்கள் தடுப்பூசிக்காக போராடிக் கொண்டுள்ளனர். ஆனால், மத்திய அரசோ டிவிட்டரில் புளூ டிக்குக்காக போராடி கொண்டுள்ளது. நமக்கு தடுப்பூசி தேவையென்றால், இனி நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார். எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தெளிவு அரசிடம் இல்லை என்று குறிப்பிடும் வகையில், ‘முன்னுரிமை’ என்ற ஹேஷ்டேக்கையும் தனது பதிவுடன் ராகுல் இணைத்துள்ளார்….

The post மக்கள் தடுப்பூசிக்காக போராடும்போது டிவிட்டர் புளூ டிக்குக்காக போராடுகிறது மத்திய அரசு: ராகுல் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Twitter ,Rahul ,New Delhi ,Center Govt ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...