திருமயம் அருகே இரு பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி எல்கை பந்தயம்-வென்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு

திருமயம் : திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.திருமயம் அருகே வி.லட்சுமிபுரத்தில் 2ம் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்தப்பட்டது. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மதுரை, அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 38 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள், 2ம் பரிசு பல்லவராயன்பட்டி வர்ஷா, 3ம் பரிசு அரிமளம் அல்ஜசீரா, மணப்பட்டி யசோதா, 4ம் பரிசு நோண்டி கோவில்பட்டி துரைப்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு வெளிமுத்தி வாகினி, 2ம் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 3ம் பரிசு கரையப்பட்டி துரைராஜ், 4ம் பரிசு கே.புதுப்பட்டி கலை ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டியானது திருமயம்-பொன்னமராவதி சாலையில் நடைபெற்ற நிலையில் பந்தயத்தை அப்பகுதி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

Related Stories: