×

ட்வீட் கார்னர்..தொடங்கியது பயிற்சி… ஜடேஜா உற்சாகம்!

நியூசிலாந்து அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மறு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் பயிற்சி செய்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். முதலில் தனித் தனியாகவும், பின்னர் சிறு சிறு குழுக்களாகவும் பயிற்சி செய்ய உள்ளனர். அனைவருக்கும் குவாரன்டைன் முடிந்த பிறகு பாதுகாப்பான ‘பயோ பபுள்’ சூழலில் இணைந்து பயிற்சி செய்யலாம். இந்த நிலையில், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்ரு பயிற்சியை தொடங்கி உள்ளார். ‘சவுத்தாம்ப்டனில் முதல் அவுட்டிங்’ என்று ட்வீட் செய்துள்ள ஜடேஜா, பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடும் படத்தை பதிவிட்டுள்ளார்….

The post ட்வீட் கார்னர்..தொடங்கியது பயிற்சி… ஜடேஜா உற்சாகம்! appeared first on Dinakaran.

Tags : Corner ,jadeja ,ICC World Test Championship Final ,New Zealand ,Southampton Ageus Bowl ,Dinakaran ,
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு