உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை போலந்து, பெலாரஸ் வழியாக மீட்க முயற்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் சண்டை நடப்பதால் அங்குள்ள நகரங்களில் இருந்து சாலை மார்க்கமாக போலந்து, பெலாரஸ் கூட்டிச்சென்று அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச்செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

Related Stories: