இந்தோனேஷியாவில் ரிக்டர் 6.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சிங்கப்பூர், மலேசியாவிலும் கட்டிடங்கள் அதிர்வு

ஜகார்த்தா:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் உணரப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு சுமத்ரா தீவின் பாசமான் ஆளுகை அருகே 17 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் அதன் அளவு 6.2 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

சில வினாடிகளே இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் உணரப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், பொருளிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. சுனாமி முன்னெச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. கடந்த 22 ஆம் தேதி இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் 4.2 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: