×

கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கோவில்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த திரு. குருசாமி ஈராச்சி அவர்களின் மகன் திரு. ராமர் மற்றும் திரு. பொய்யாமொழி அவர்களின் மகன் திரு. தங்கவேல்; தொட்டம்பட்டி,

பசுவந்தனையைச் சேர்ந்த திரு. குட்டையன் அவர்களின் மகன் திரு. ஜெயராஜ்; நாலாட்டின்புதூரைச் சேர்ந்த திரு. வெள்ளச்சாமி அவர்களின் மகன் திரு. மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kovilpatti ,Chief Minister ,MK Stalin , Rs 3 lakh compensation to be paid to families of 4 victims of Kovilpatti firecracker blast: CM MK Stalin
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!