உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்..!!

ஐரோப்பா: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது புதிய தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா இன்று 2 நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின், ரஷ்யா மீது பல புதிய தடைகளை விதித்துள்ளார்.

நிதி, எரிசக்தி, போக்குவரத்து, சிறப்பு சலுகை விசாக்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகள் மூலம் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுத்து ரஷ்யப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகள் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ரஷ்யாவில் இருந்து கேஸ் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: