×

சின்ன மம்மி அட்டாக்கால் ஆடிப்போன எடப்பாடி பற்றிச் சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது என்பது எப்படி நிதர்சனமோ… புதுச்சேரி அரசில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது என்பதில் புல்லட் சாமி உறுதியாக இருக்கிறாராமே… அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் மாமனார் புல்லட்சாமி முதல்வராகிவிட்டார். அதே கூட்டணியில் இருக்கும் மருமகன் துணை முதல்வர் பதவிக்கு முட்டி மோதுகிறார். சொந்தமாக இருந்தாலும் அரசியல் சதுரங்கத்தில், ஒருவர் மட்டுமே அதிகார மையமாக இருக்க வேண்டும். இதில் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இடமில்லை என்பதில் புல்லட் சாமி உறுதியாக இருக்கிறாராம். இதனால் தான், புதிய அமைச்சரவை அமைக்காமல் தாமதத்துக்கு காரணமாக இருக்காம். துணை முதல்வர் பதவியை உருவாக்கி, தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லையாம். மேலும் மத்திய அரசிடம் வலிய சென்று துணை முதல்வர் பதவி ஒன்றை புதுச்சேரிக்கு ஒதுக்கி ஆணை கொடுக்க வேண்டும் என்றும் கேட்க மறுக்கிறாராம்.  தாமரை தரப்பிடம், உங்கள் மத்திய அரசு தானே… துணை முதல்வர் என்ற பதவி வேண்டும் என்று நீங்களே கேளுங்கள்… புதிதாக உத்தரவு போட்டு வாங்கிட்டு வாங்க… அந்த பதவியை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறாராம். இதனால் மருமகன் உச்ச கோபத்தில் இருக்கிறாராம். பதவி ஏற்றால் துணை முதல்வர்… இல்லையென்றால் எம்எல்ஏ பதவியை வேண்டாம் என்ற உறுதியோடு இருக்கிறாராம்.. மாமனார்-மருமகன் ஆடும் கண்ணாமூச்சு ஆட்டத்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அவங்க சொந்த கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘மழையின் கருணையால் ஓரே நாளில் லட்சங்களை குவித்த இலை நிர்வாகி பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘‘குமரியை மழை புரட்டி எடுக்க… பலர் சாப்பாடு கிடைக்காமல்… மருந்து கிடைக்காமல்… தங்க இடம் கிடைக்காமல் தத்தளித்து வந்த சம்பவங்கள் எல்லோருக்கும் தெரியும். தெரியாத விஷயம் ஒன்றை அந்த பகுதியை சேர்ந்த மக்களே பேசிக்கிறாங்க..  சில நாட்களுக்கு முன்பு பருவமழையால் பழையாற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடியதாம். இந்த வெள்ளம் அப்படி போய்… இப்படி போய்  நாகர்கோவில் அருகே உள்ள பழையாற்றின்  கரையோர பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் புகுந்ததாம். இதனால் மதுபாட்டில்கள் அடித்துச் சென்றுவிடும் என்று புரளியை கிளப்பிவிட்டு மதுக்கடையை கடை ஊழியர்கள் திறந்தாங்களாம். இதை ஏற்கனவே தெரிந்து இருந்த அந்த இலை நிர்வாகி ஒருவர்,  ஏற்கனவே டாஸ்மாக் மேல் மட்ட அதிகாரிகளிடம் தனக்கு உள்ள நெருக்கத்தை  பயன்படுத்தி பெட்டி, பெட்டியாக மதுபான வகைகளை தூக்கி சென்றுள்ளார். இப்போது  அதை அதிக விலைக்கு விற்று ஒரே நாளில் லட்சக்கணக்கில் லாபம் பார்த்துவிட்டாராம். இந்த பிரச்னையை மூடி  மறைக்க, டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துள்ளார்.  ஆட்சி மாறினாலும் குமரி மாவட்டத்தில் இன்னும் இவுங்க ஆட்டம் முடியல என்று  இலை நிர்வாகியால் பாதிக்கப்பட்டவர்கள் கொதிப்படைந்து பேசி வருகிறார்கள்… மழையால் கடைக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றாலும் கரைவேட்டியும், கடை ஊழியரும் நடத்திய நாடகம் என்ற பேச்சும் மக்களிடையே ஓடுகிறது…’’ என்றார் விக்கியானந்தா.‘‘    ‘‘சின்ன மம்மி குக்கர் நபர்களிடம் பேசி நலம் விசாரிக்கிறார்… அவர் இலை நபர்களுடன் பேசவில்லை. அவரால் இலையில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று சொன்னாரே எடப்பாடி.. மறுநாளே நிலைமை மாறி இருக்கிறதே… உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘திருடன் ஒரு இடத்தில் திருடச் சென்றால் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் என்று போலீஸ்காரர்கள் உறுதியாக சொல்வார்கள். அதேபோல ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதிக்கு சேலன்ஜ் செய்யும்போது… ஏதாவது ஒரு பாயின்ட்டை தன்னை அறியாமல் எடுத்து கொடுத்துவிடுவார்.. அதை தான் எடப்பாடி செய்துள்ளதாக குக்கர் கட்சியினர் சொல்லி சிரிக்கின்றனர். அதாவது, சில நாட்களுக்கு முன்னதாக, சின்ன மம்மி,  இலை நிர்வாகிகள்  யாருடனும் பேசவில்லை என்று எடப்பாடி குரலை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி கூறியது தான்  மிச்சம். அடுத்த நாள் வந்த ஆடியோ… எடப்பாடி நெஞ்சில் எரிமலையாக வெடித்ததாக சொல்றாங்க. அதாவது, நெல்லை இலை கட்சி நிர்வாகியுடன் சின்ன மம்மி தொலைபேசியில் தொடர்பு  கொண்டு பேசும் ஆடியோ வெளியாகி விட்டது.  நெல்லையைச் சேர்ந்த 2 பேரிடம்  பேசிய ஆடியோ ரிலீஸ் ஆனதன் மூலம் இலை நிர்வாகிகளுடன் தான் சின்ன மம்மி  பேசுகிறார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அவர் சிறையில் இருந்த போது  குக்கர் காரர் துவங்கிய கட்சிக்கு நெல்லையில் பலத்த ஆதரவு இருந்தது.  அப்போது இலை கட்சிக்கே குக்கர் காரரின் கட்சி சவால் விடுத்து கூட்டுறவு  சங்கங்களில் பல பதவிகளை கைப்பற்றியது. பின்னாளில் அவர்கள் இலை கட்சியில்  ஐக்கியமானாலும், தேர்தலில் டிக்கெட் கிடைக்காத அல்வா மாவட்டத்தினர் பலரும்  சின்ன மம்மி நம்மிடம் பேசுவார்களா என தவம் கிடக்கிறார்களாம். அதனால் தான்  எடப்பாடிக்கு பதிலுக்கு போட்டியாக நெல்லை அதிமுக பிரமுகர்களை சின்ன  மம்மி தொடர்பு கொண்டு எடப்பாடியாருக்கு ஷாக் கொடுத்தாராம். முதலில் சின்ன  மீனை பிடிப்போம், அதன் பிறகு விலாங்கு மீனை பார்க்கலாம் என அடி  போடுகிறாராம் சின்ன மம்மி. அவரது கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா என இலை கட்சியினர்  அங்கொன்றும், இங்கொன்றும் கால் வைத்து வருகின்றனர்…’’என்றார் விக்கியானந்தா.              …

The post சின்ன மம்மி அட்டாக்கால் ஆடிப்போன எடப்பாடி பற்றிச் சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Chinna Mummy ,Edappadi ,Yananda ,Puducherry government ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்