டிக்டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது

கோவை: டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தர்ஷா ஆகிய இருவரும் யூடியூப் சேனலில் ஆபாசமாக சில பதிவுகளை பதிவிட்டனர். இதையடுத்து கடந்த ஜனவரி 4ம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். அதன்படி ரவுடி பேபி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Related Stories: