×

'ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமர் மோடி கூறினால் கேட்பார்': உக்ரைன் தூதர் இகோர் பேட்டி

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை நிறுத்த அதிபர் புதனுடன் பேசுமாறு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்புடன் கூட்டு சேர கூடாது என ரஷ்யா பல காலமாக உக்ரைனை எச்சரித்து வந்தது. ஆனால் உக்ரைன் அடிபணியவில்லை. நேட்டோ அமைப்புடன் இணைவதில் தீர்க்கமாக இருந்தது. அதேபோல அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை குற்றஞ்சாட்டியது. ஒரு கட்டத்தில் மோதல் முற்றவே உக்ரைன் எல்லைகளில் ரஷ்யா போருக்கான ஒத்திக்கையை தொடங்கியது.

வீரர்கள், துருப்புகள், பீரங்கிகள், சக்திவாய்ந்த ஆயுதங்கள் என படைப் பரிவாரங்களை உக்ரைன் எல்லையைச் சுற்றி நிலைநிறுத்தியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுரவலாம் என்ற பதற்ற நிலை இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளே செய்தன. எனினும் படை வீரர்களை அனுப்பவில்லை. நேட்டோ படை வீரர்களில் ஒருசிலர் மட்டும் அனுப்பப்பட்டனர். இச்சூழலில் இன்று காலை திடீரென உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டார்.

அந்த கணமே உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து வான்வழி தாக்குதலை  ரஷ்ய ராணுவம் நடத்தியது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் உலக நாடுகள் அனைத்துமே தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு அறிக்கை விட்ட புடின், உக்ரைன் விவகாரத்தில் யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவைச் சந்திப்பார்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அமெரிக்கா தவிர பல்வேறு நாடுகள் கள்ள மௌனம் காத்து வருகின்றனர். அதில் இந்தியாவும் ஒன்று.

ஏனென்றால் இந்திய ராணுவத்தில் பெரும்பாலான தளவாடங்கள் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தது தான். அதேபோல ரஷ்யாவின் மிகப்பெரிய கூட்டாளி சீனா. ரஷ்யா என்ன செய்தாலும் அதனுடன் துணை நிற்கும் வகையிலான நோ லிமிட் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது சீனாவுக்கு கூடுதல் சாதகமாக அமைந்துவிடும். இன்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று தெரிந்துவிட்டது. இதில் பேசிய இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி ,உடனடியாக இருதரப்பும் படைகளைத் திரும்பப் பெற வேண்டும்.

பதற்றமான சூழலைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் சுமுக உடன்பாடு எட்ட வேண்டும்  என சுருக்கமாக முடித்துக் கொண்டார். இச்சூழலில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா, உக்ரைனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும், உலக அரங்கில் மோடிக்கு வலுவான குரல் இருப்பதால் அவர் கூறினால் புடின் கேட்பார் எனவும் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் யாருடைய பேச்சை கேட்பார் என்று தெரியவில்லை, ஆனால், இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும் பேச முடியும்; உக்ரைன் அதிபர் உடனும் பேச முடியும் என இகோர் தெரிவித்தார். வரலாற்றில் பலமுறை அமைதியை ஏற்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது என உக்ரைன் தூதர் கருத்து தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும்,  இந்தியாவின் தீவிர ஆதரவிற்காக உக்ரைன் காத்திருப்பதாகவும் இகோர் தெரிவித்தார். ஜனநாயக நாடான உக்ரைன் மீது தாக்குதல் நடக்கும் நிலையில் இந்தியா தனது உலகளாவியலான பொறுப்பை ஏற்க இகோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Russian ,Chancellor ,Puhan ,Indian ,Modi ,Ukraine ,Ambassador ,Igor , Russian President, Putin, Prime Minister of India, Modi, Ambassador of Ukraine, Igor, Interview
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...