×

விஸ்வரூபம் எடுத்த ரஷ்யா - உக்ரைன் தாக்குதல்!: நேட்டோ நாடுகள் நாளை அவசர ஆலோசனை..!!

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை அடுத்து நேட்டோ நாடுகள் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளன. காணொலி காட்சி வாயிலாக நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் கடுமையாக்கப்படும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரித்திருந்த நிலையில் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து குண்டுவீச்சு காரணமாக கரும்புகை சூழ்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் பல்முனை தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லை வழியாக ரஷ்யாவின் போர் டாங்குகள் உக்ரைனுக்குள் நுழைந்தன. வான்வழி, கடல் வழி, தரை வழியாக மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் நடந்த தாக்குதலில் மக்கள் உயிரிழந்தனர். தற்போது ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரை நெருங்கின.

இன்னும் சில மணி நேரங்களில் ரஷ்ய படைகள் கீவ் நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளன. உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷ்ய சைபர் படையால் முடக்கப்பட்டு இணையதள தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளது.  உக்ரைனில் இருந்து வரும் மக்களுக்கு தஞ்சமளிக்க தயார் என அண்டை நாடான மால்டோவா அறிவித்துள்ளது. இந்நிலையில், நேட்டோ நாடுகள் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளன.


Tags : Russia ,Ukraine ,Viswarupam ,NATO , Russia - Ukraine, attack, NATO, consultation
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...