10 அடி ஆழத்திற்கு பூமி உள்வாங்கியது; குன்னூரில் பரபரப்பு

குன்னூர்: குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் விவசாய நிலத்தில் திடீரென 10 அடி வரை பூமி உள்வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் அதிகளவில் மலைக்காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தேவைக்காக கேத்தி பாலாடா சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே கண்ணபிரான் என்பவரது விவசாய நிலத்திலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டள்ளது. அந்த இடத்தில் திடீரென 10 அடி வரை பூமி உள்வாங்கியது. இதை கண்டு விவசாயிகள் கடும் அச்சமடைந்தனர். இது தொடர்பாக கேத்தி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் நிலம் உள்வாங்கியது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: