×

21 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி நகராட்சி திமுக வசமானது-தாய், மகன் வெற்றி

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி நகராட்சி திமுக வசமானது.
கோவில்பட்டி நகராட்சி 36 வார்டுகளில் பதிவான வாக்குகள், நேற்று அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணும் பணி நடந்தது. தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திமுக 19, மார்க்சிஸ்ட் 5, மதிமுக 2, இந்திய கம்யூ. 1, அதிமுக -4, பாஜ -1, அமமுக -1, சுயேட்சை -3 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளன.

வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு: 1வது வார்டு கனகலட்சுமி திமுக - 1249, மூக்கம்மாள் அதிமுக - 398, 2வது வார்டு செண்பகவல்லி திமுக - 699, ரேணுகாதேவி அதிமுக - 315, 3வது வார்டு கருப்பசாமி அமமுக - 437, சண்முகராஜ் காங். - 382, 4வது வார்டு சித்ரா திமுக - 756, விஜயலட்சுமி சுயேட்சை - 206, 5வது வார்டு லவராஜா சுயேட்சை - 1127,மதி காங். - 286, 6வது வார்டு முத்துராஜ் மார்க்சிஸ்ட் 765, பாலமுருகன் அதிமுக 577, 7வது வார்டு சண்முகவேல் திமுக - 565, சரவணன் அதிமுக - 204, 8வது வார்டு சுரேஷ் திமுக - 520,

சண்முகசுந்தரம் அதிமுக - 390, 9வது வார்டு மகபூப் ஜெரீனா திமுக - 746, சுந்தரி அதிமுக - 535, 10வது வார்டு முத்துலட்சுமி மார்க்சிஸ்ட் - 319, காளீஸ்வரி அமமுக - 318, 11வது வார்டு ஆர்.எஸ்.ரமேஷ் மதிமுக - 845, வேல்மணி அதிமுக - 431, 12வது வார்டு உமா மகேஸ்வரி அதிமுக - 708, ஜெயலட்சுமி திமுக - 494, 13வது வார்டு சித்ராதேவி திமுக - 1081, கிருஷ்ணவேணி அதிமுக - 299, 14வது வார்டு தவமணி திமுக - 792, ஆபிரகாம் அய்யாத்துரை அதிமுக - 496,

15வது வார்டு மணிமாலா மதிமுக - 1067, வசந்தி அதிமுக - 223, 16வது வார்டு கருணாநிதி திமுக - 914, ரமேஷ் அதிமுக - 303, 17வது வார்டு சரோஜா இந்திய கம்யூனிஸ்ட் - 418, சந்திரா சுயேட்சை - 242, 18வது வார்டு விஜயா மார்க்சிஸ்ட் - 634, பிரதிபா அதிமுக - 226, 19வது  வார்டு விஜயன் சுயேட்சை - 687, கிருஷ்ணகுமார் மதிமுக - 457, 20வது வார்டு விஜயகுமார் பாஜ - 546, தெய்வேந்திரன் மதிமுக - 434, 21வது வார்டு உலகராணி திமுக - 417, பத்மாவதி அதிமுக - 304, 22வது வார்டு ஜாஸ்மின் லூர்து மேரி திமுக - 780, கமலா அதிமுக - 360, 23வது வார்டு சுதாகுமாரி சுயேட்சை - 548, இசக்கியம்மாள் திமுக - 440, 24வது வார்டு செண்பகமூர்த்தி அதிமுக - 706, குருவத்தாய் மதிமுக - 350,

25வது வார்டு மாரியம்மாள் திமுக - 595, ராதா சுயேட்சை - 192, 26வது வார்டு வள்ளியம்மாள் அதிமுக - 729, ராமசுப்புலட்சுமி பாஜ - 218, 27வது வார்டு ஜோதிபாசு மார்க்சிஸ்ட் - 336, செண்பகராஜ் சுயேட்சை - 278, 28வது வார்டு முத்துலட்சுமி திமுக - 1313, மாரீஸ்வரி அதிமுக - 302, 29வது வார்டு கருப்பசாமி திமுக - 471, சகாதேவன் அதிமுக - 381, 30வது வார்டு புவனேஸ்வரி திமுக - 589, கலையரசி பாஜ - 285, 31வது வார்டு சீனிவாசன் மார்க்சிஸ்ட் - 475, கற்பகம் அமமுக - 298, 32வது வார்டு கவியரசன் அதிமுக - 684, நெப்போலியன் சுயே. - 279, 33வது வார்டு சண்முகராஜ் திமுக - 843, ஆண்டாள் அதிமுக - 494, 34வது வார்டு ராமர் திமுக - 658, சின்னமாரிமுத்து அதிமுக - 206, 35வது வார்டு ஏஞ்சலா திமுக - 735, சண்முகலட்சுமி அதிமுக - 238, 36வது வார்டு கனகராஜ் திமுக - 613, தமிழரசி சுயே. - 360.

இந்த தேர்தல் வெற்றி மூலம் கோவில்பட்டி நகராட்சியை  21 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றி உள்ளது. நகராட்சியில் திமுக 19 வார்டுகளில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரி ராஜாராம், உதவி தேர்தல் அதிகாரிகள் ரமேஷ், மணிகண்டன், பிரதானபாபு, நாராயணன் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் 19 பேர் மற்றும் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள், தூத்துக்குடி சென்று கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஒரு ஓட்டில் வெற்றி

கோவில்பட்டி நகராட்சி 10வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் முத்துலெட்சுமி அவரை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் காளீஸ்வரியை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Kovalbati Municipality ,DiMugha Santas , Kovilpatti: The DMK alliance has won more seats in the Kovilpatti municipal election. Thus 21 years later Kovilpatti
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்