×

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்தையும் கைப்பற்றி திமுக கூட்டணி சாதனை

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெற்ற 35 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக வெற்றிபெற்ற வார்டுகள்: 3,4,5,6,7,8,9,10,11,13,14,15,16,21,22,24,27,28,29,30,31,32,33,34 என மொத்தம் 24 வார்டுகள், அதிமுக வெற்றிபெற்ற வார்டுகள் 1, 12,20,23,25,26,36 என மொத்தம் 7 வார்டு, பாமக 18 மற்றும் 35வது வார்டுகள் இரண்டில் வெற்றிபெற்றது. காங்.17வது வார்டு, மதிமுக 2வது வார்டு தலா ஒரு வெற்றி.

சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக(3,9,12, 13, 15, 16,17,18,19,23,24) ஆகிய 11 வார்டுகளில் வெற்றிபெற்றது. அதிமுக(1,4,8,) 3 வார்டுகளிலும், பாமக (10 மற்றும் 22) 2 வார்டுகளிலும், மதிமுக (21வது வார்டு) 1, தேமுதிக(20வதுவார்டு) 1 சுயேட்சைகள்,(2,5,6,7,11,14) 6ல் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளன.

மணல்மேடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக (1,3,5,7,8,11,12,15) 8வார்டுகளிலும் அதிமுக(2,6,,9,10,14) 5, காங்.(13வது வார்டு), விசிக(4வது வார்டு) தலா ஒன்றை கைப்பற்றியுள்ளது.
குத்தாலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக(1,2,3,7,8,9,10,12,13,15) 10 வார்டுகளிலும், அதிமுக(5,6,14) ஆகிய 3 வார்டுகளிலும், காங்கிரஸ் 1வது வார்டிலும், பாமக 4வது வார்டிலும் என தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக(1,2,3,7,8,9,10,12,13,15,) 10. வார்டுகளிலும், அதிமுக(1,5,9)ஆகிய 3 வார்டுகளிலும், பாமக, 8வது வார்டு, சுயேட்சை 2வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக(1,2, 3,6,7,8,9,10,11,12,13,14,15,18) ஆகிய 14 வார்டுகளிலும், அதிமுக(4 மற்றும்5) என 2 வார்டுகளிலும் விசிக 17வதுவார்டிலும் இந்திய யூனியள் முஸ்லிம்லீக் 16வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.இரண்டு நகராட்சி, 4 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

Tags : Thimuga Alliance ,Mayiladurah , Mayiladuthurai: The DMK alliance has won all the seats in the Mayiladuthurai district. In the Mayiladuthurai municipality.
× RELATED கனமழை காரணமாக மயிலாடுதுறை...