×

புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 35 வார்டுகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி: அதிமுக 4 வார்டுகளை கைப்பற்றி படுதோல்வி

ஆவடி: புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 35 வார்டுகளை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக 4 வார்டுகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் திமுக சார்பில் 38 வார்டுகளிலும், காங். மதிமுக தலா 3 வார்டுகளிலும் விசிக 2 வார்டுகளிலும், சிபிஐ, சிபிஎம் தலா ஒரு வார்டுகளிலும் போட்டியிட்டது. மேலும் அதிமுக சார்பில் 46 வார்டுகளிலும், புரட்சி பாரதம் சார்பில் 2 வார்டுகளிலும் போட்டியிட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை பட்டாபிராம் இந்து கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக 35 வார்டுகளில் அமோக வெற்றிபெற்றது. மேலும், இதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக தலா 3 வார்டுகளிலும், சிபிஎம், விசிக தலா ஒரு வார்டிலும், அதிமுக 4 வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது.

அதன் வெற்றி விவரம் பின்வருமாறு:
1வது வார்டு (அதிமுக வெற்றி): பிரகாஷ்(அதிமுக)-1970, பார்த்தசாரதி(திமுக)-1569.

2வது வார்டு(திமுக வெற்றி): கோவிந்தராஜ்(திமுக)-1519, ராஜா(அதிமுக)-533.

3வது வார்டு(சுயேச்சை வெற்றி): ஆறுமுகம்(சுயேச்சை)-1934, இளங்கோவன்(திமுக)-1259, சசிகலா(அதிமுக)-952.

4வது வார்டு(திமுக வெற்றி): ஆசிம் ராஜா(திமுக)-755, ரமேஷ்(அதிமுக)-129.

5வது வார்டு(திமுக வெற்றி): செண்பகவள்ளி ரவி(திமுக)- 2556, சாந்தி(புரட்சி பாரதம்)-1350.  

6வது வார்டு(திமுக வெற்றி): பைரவி ஜான்(திமுக)-1338, கவுரி(சுயேச்சை)-1294, கலைவாணி(அதிமுக)-1235.

7வது வார்டு(திமுக வெற்றி): ஜெயப்பிரியா சரணவணன் (திமுக)-3259, தீபிகா(பாஜ)-656, மஞ்சு(அதிமுக)-481.

8வது வார்டு(திமுக வெற்றி): சக்திவேவன்(திமுக)- 2329, ராஜசேகர்(அதிமுக)-711.

9வது வார்டு(திமுக வெற்றி): உதயகுமார்(திமுக)-1833, ராஜசேகர்(சுயேச்சை)-954, பலராமன்(சுயேச்சை)-697, ஜெயசந்தர்(அதிமுக)-134.

10வது வார்டு(சிபிஎம் வெற்றி): ஜான்(சிபிஎம்)-927, மான்ராயன்(சுயேச்சை)-632, மணிகண்டன்(சுயேச்சை)-554, சண்முகசுந்தரம்(சுயேச்சை)-416, முல்லை தயாளன்(அதிமுக)-243.

11வது வார்டு(மதிமுக வெற்றி): பரிமளா சுப்பிரமணி (மதிமுக)- 1223, ராஜராஜேஸ்வரி (சுயேச்சை)-395, சங்கீதா(பாஜ)-290, மகேஸ்வரி (அதிமுக)-262.

12வது வார்டு (திமுக வெற்றி): சுந்தரி சிங்காரம்(திமுக)-2685, ராஜேஸ்வரிஅதிமுக-635.

13வது வார்டு(காங்கிரஸ் வெற்றி): அபிஷேக்(காங்கிரஸ்)-1292, ராமதாஸ்(அதிமுக)-672.

14வது வார்டு(அதிமுக வெற்றி): ராஜேஷ்குமார்(அதிமுக)-1337, ரவிச்சந்திரன்(விசிக)-1084.

15வது வார்டு(திமுக வெற்றி): அம்மு(திமுக)-3477, ஆர்த்தி(அதிமுக)-1184.

16வது வார்டு(அதிமுக வெற்றி): மீனாட்சி(அதிமுக)-1342, நித்யா(திமுக)-1206.

17வது வார்டு(திமுக வெற்றி): ஷீலா தாஸ்(திமுக)-2042, ஸ்ரீதேவி(அதிமுக-545.

18வது வார்டு(திமுக வெற்றி): சுகன்யா(திமுக)-2783, பானுமதி சிகாமணி(அதிமுக0-1334.

19வது வார்டு(திமுக வெற்றி): சுந்தரி கோபி(திமுக)-2799, ரமணி(அதிமுக-1419.

20வது வார்டு(திமுக வெற்றி): திவ்யா தமிழ்வாணன் (திமுக)-1642, வைஜெயந்தி மாலா(சுயேச்சை)-1366, கலைச்செல்வி(பாமக)-1173, மல்லிகா(அதிமுக)-578.

21வது வார்டு(திமுக வெற்றி): வீரபாண்டியன்(திமுக)-1685, சத்திய மூர்த்தி(பகுஜன் சமாஜ் கட்சி)-1578, ரங்கநாதன்(அதிமுக)-579.

22வது வார்டு(திமுக வெற்றி): ஜோதி லட்சுமி(திமுக)-2498, மாலா(அதிமுக)-1746.

23வது வார்டு(மதிமுக வெற்றி): சூர்யகுமார்(மதிமுக)-2696, பிரகாஷ்பாபு(அதிமுக)-1653.

24வது வார்டு(திமுக வெற்றி): பெருமாள்(திமுக)-1452, முருகானந்தம்(அதிமுக)-1293.

25வது வார்டு(அதிமுக வெற்றி): மதுரை ஆறுமுகம்(அதிமுக)-861, மயில்வாகணன்(சிபிஐ)-829.

26வது வார்டு(திமுக வெற்றி): மாலா பிரகாஷ்(திமுக)-2075, மகேஷ்வரி(தேமுதிக)-535, சாந்தி(அதிமுக)-389.

27வது வார்டு(திமுக வெற்றி): வெங்கடேசன்(திமுக)-1810, அறிவரசன்(அதிமுக)-812.

28வது வார்டு(திமுக வெற்றி): அமுதா பேபிசேகர் (திமுக)-3339, முருகேஷ்(அதிமுக)-564.

29வது வார்டு(திமுக வெற்றி): விமல்(திமுக)-1650, அசோக்குமார்(சுயேச்சை)-505, பன்னீர்செல்வம்(புரட்சி பாரதம்)-335.

30வது வார்டு(திமுக வெற்றி): செல்வம் (திமுக)-1656, ஜெபசெல்வம் (அதிமுக)-966, கோபாலகிருஷ்ணன் (சுயேச்சை)-536.

31வது வார்டு(திமுக வெற்றி): வெங்கடேசன்(திமுக)-1642, கிருஷ்ணமூர்த்தி(அதிமுக)-1426.

32வது வார்டு(திமுக வெற்றி): சுதாகரன்(திமுக)-1570, குருநாதன்(அதிமுக)-470.

33வது வார்டு(திமுக வெற்றி): ஹரி(திமுக)-1945, செந்தில்குமார் (அமுமுக)-736, ரவீந்திரநாத்(பாஜ)-448, பாண்டியன்(பாமக)-383, சசிகலா(அதிமுக)-246.

34வது வார்டு(காங்கிரஸ் வெற்றி): ரேவதி(காங்கிரஸ்)-1571, இந்திரா(பாமக)-815, விஜயலட்சுமி(அதிமுக)-389.

35வது வார்டு(திமுக வெற்றி): கீதா யுவராஜ்(திமுக)-3134, மைனாவதி(அதிமுக)-1424.

36வது வார்டு(திமுக வெற்றி): யாஸ்மின் பேகம்(திமுக)-2896, பிரான்சினா(சுயேச்சை)-1017, ஜாரீனா(அதிமுக)-496.

37வது வார்டு(திமுக வெற்றி): ரமேஷ்(திமுக)-2086, குணசீலன்(சுயேச்சை)-1420, சுதாகரன்(அதிமுக)-520.

38வது வார்டு(காங்கிரஸ் வெற்றி): மேகலா சீனிவாசன்(காங்கிரஸ்)-2195, சாந்தி(அதிமுக)-1069.

39வது வார்டு(திமுக வெற்றி): சரளா(திமுக)-2373, நூர்ஜகான்(அதிமுக)-829.

40வது வார்டு(திமுக வெற்றி): ரவி(திமுக)-1031, ரவி(அதிமுக)-391.

41வது வார்டு(விசிக வெற்றி): சாந்தி பாண்டியன்(விசிக)-1311, உமா மகேஸ்வரி(சுயேச்சை)-1179, மோகனா(அதிமுக)-762.

42வது வார்டு(திமுக வெற்றி): ராஜேந்திரன்(திமுக)-1746, செந்தில்குமார்(பாமக)-799, முருகன்(அதிமுக)-518.

43வது வார்டு(திமுக வெற்றி): செல்வி(திமுக)-1707, கீதா(சுயேச்சை)-724, பிரேமாவதி (அதிமுக)-215.

44வது வார்டு(திமுக வெற்றி): சுமதி(திமுக)-1942, நிறைமதி(அதிமுக)-1404.

45வது வார்டு(திமுக வெற்றி): சசிகலா(திமுக)-2401, பிரேமலதா(அதிமுக)1011.

46வது வார்டு(திமுக வெற்றி): மீனாட்சி குமார்(திமுக)-3686, லட்சுமி(அதிமுக)-561.

47வது வார்டு(திமுக வெற்றி): அலகுவிஜயா(திமுக)-1395, உமா(அதிமுக)-775.

48வது வார்டு(மதிமுக வெற்றி): கார்த்திக் காமேஷ்(மதிமுக)-1162, ராஜசேகர் (சுயேச்சை)-807, ராஜ்(அதிமுக)-372. எனவே, இதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 35 வார்டுகளை திமுக கைப்பற்றி அமோக வெற்றியை பெற்றுள்ளது.


Tags : DiMugha Amoa ,Municipality , DMK wins 35 wards in newly launched Avadi Corporation: AIADMK loses 4 wards
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி...