×

ஊத்துக்கோட்டையில் திமுக இமாலய வெற்றி: போட்டியிட்ட 14 வார்டிலும் பாஜ டெபாசிட் இழந்தது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 இடங்களை பிடித்து இமாலய வெற்றி பெற்றது. பின்னர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பாஜ போட்டியிட்ட 9 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும் டெபாசிட்டை இழந்தன. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில், 12வது வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது.

அதன் விவரம் வருமாறு:
1வது வார்டு(திமுக வெற்றி): சமீமா ரகீம் (திமுக) - 646, ரகமத் பீ (அதிமுக) - 139.

2வது வார்டு(திமுக வெற்றி): இந்துமதி (திமுக) - 202, மோகனா (அதிமுக) - 65.

3வது வார்டு(திமுக வெற்றி): அப்துல் ரஷீத் (திமுக) -  180, அதிமுக ஷேக்தாவுத் (அதிமுக) - 147.

4வது வார்டு(திமுக வெற்றி): அபிராமி (திமுக) - 234, கோமளா (அதிமுக) - 211.   

5வது வார்டு(திமுக வெற்றி): கோகுலகிருஷ்ணன்  (திமுக) - 321, புவனா (அதிமுக) -  200.

6வது வார்டு(அதிமுக வெற்றி): ஆனந்தி (அதிமுக) - 443, செந்தாமரை (திமுக) - 282.

7வது வார்டு(திமுக வெற்றி): குமரவேலு (திமுக)  - 392, ராசமாணிக்கம் (அதிமுக) - 157.

8வது வார்டு(திமுக வெற்றி): திரிபுரசுந்தரி (திமுக)  - 293, வள்ளி (அதிமுக) - 155.  

9வது  வார்டு(திமுக வெற்றி): ஜீவா (திமுக)  - 244, திருநாவுக்கரசு (அதிமுக) - 88.

10வது வார்டு(திமுக வெற்றி): ஆப்தாப்பேகம் (திமுக) - 154 (குலுக்கல் முறை வெற்றி), சாந்தி (சுயே.) - 154.

11வது வார்டு(திமுக வெற்றி): மணிகண்டன் (எ) கோல்டுமணி (திமுக) - 281, பிரஸ்  பி.இ.மணி (அதிமுக) - 109.

13வது வார்டு(திமுக வெற்றி): கல்பனா பார்த்திபன் (திமுக)  - 366, அலமேலு (சுயே.) - 263.

14வது வார்டு(திமுக வெற்றி): சுமலதா நரேஷ் (திமுக) -  313, புஷ்பா (அதிமுக) - 67.

15வது வார்டு(அதிமுக வெற்றி): அருணாசலம் (அதிமுக)  - 281, காஞ்சனா (திமுக) - 234.

 என ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக 13 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. முன்னதாக தபால் வாக்குகள் 25ல் திமுக 15 வாக்குகளையும்,  அதிமுக 7 வாக்குகளையும், சுயேச்சை 2, பாஜ 1 வாக்கையும் பெற்றிருந்தன. மேலும், வெற்றி பெற்ற பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏவிடமும், முன்னாள் எம்எல்ஏ இஏபி.சிவாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.

* டெபாசிட் இழந்த கட்சிகள்
அதிமுக 3 வார்டுகளிலும்,  பாஜ போட்டியிட்ட 9 வார்டுகளிலும் டெபாசிட் இழந்தது.  மேலும்  காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் எம்எல் போன்ற கட்சிகளும், ஒரு சிலரை தவிர மற்றவர்களில் சுயேச்சைகள் டெபாசிட் இழந்தன. 


Tags : DMK ,Uthukottai ,BJP , DMK Himalayan victory at Uthukottai: BJP lost the deposit in all the 14 wards it contested
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...