×

திருவேற்காடு நகராட்சியில் திமுக கூட்டணி 12 இடங்களில் வெற்றி: அதிமுக, பாஜ படுதோல்வி

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் திமுக  கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திருவேற்காடு நகராட்சியில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக மற்றும் பாஜ படுதோல்வியை சந்தித்துள்ளன. கோயில் நகரமான திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 16 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.  அதிமுக 18 வார்டுகளிலும், பாமக 10 வார்டுகளிலும் பாஜ 18 வார்டுகளிலும், அமமுக 12 வார்டுகளிலும் போட்டியிட்டன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மொத்தம் 18 வார்டுகளில் திமுக 11 இடங்கள், காங்கிரஸ் 1 என திமுக கூட்டணி 12 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக திருவேற்காடு நகராட்சியை கைப்பற்றியது.

இதில் வெற்றிபெற்றவர்கள் குறித்த விபரம்:
1வது வார்டு (சுயேச்சை வெற்றி): சாந்தி - 737(சுயே), வனிதா - 729(அதிமுக).

2வது வார்டு (சுயேச்சை வெற்றி): ஆஷா- 1361(சுயே), சூர்யா- 1125(திமுக).

3வது வார்டு (சுயேச்சை வெற்றி): கோமதி- 1652(சுயே), சரவணன்-1217 (திமுக), மகேந்திரன்-281 (அதிமுக).

4வது வார்டு (திமுக வெற்றி): சுதாகர்- 1782 (திமுக), இயேசையா- 869 (சுயேச்சை), ஹேமாவதி- 59 (அதிமுக).

5வது வார்டு (திமுக வெற்றி): பிரதானம்- 1373 (திமுக), மணிவண்ணன்- 1165 (அதிமுக), பிரிதிவிராஜ்- 814 (பிஎஸ்பி).

6வது வார்டு (திமுக வெற்றி): விஜயலட்சுமி- 984 (திமுக), சத்யா- 609 (பிஎஸ்பி), சூடாமணி- 204 (அதிமுக).

7வது வார்டு (திமுக வெற்றி): ருக்மணி- 1875 (திமுக), ஷாலினி- 355 (அதிமுக), லதா- 88 (பாஜ).

8வது வார்டு (திமுக வெற்றி): கிருஷ்ணமூர்த்தி- 2330 (திமுக), ராஜசிம்ம மகேந்திரா- 963 (பாஜ), சேகர்- 86 (அதிமுக).

9வது வார்டு (திமுக வெற்றி): நர்மதாகுமாரி- 1346 (திமுக), சுரேஷ்- 1020 (சுயேச்சை), கேசவன்- 867 (சுயேச்சை).

10வது வார்டு (திமுக வெற்றி): நளினி- 1538 (திமுக), பிரியா- 590 (அதிமுக), சுமதி- 546 (சுயேட்சை).

11வது வார்டு (திமுக வெற்றி): இளங்கோவன்- 884 (திமுக), திருமலை- 600 (அதிமுக), முருகன்- 555 (அமமுக).

12வது வார்டு (சுயேச்சை வெற்றி): ஜானகி- 1053 (சுயேச்சை), கெஜவல்லி- 980 (திமுக), டில்லிராணி- 667 (சுயேட்சை).

13வது வார்டு (சுயேச்சை வெற்றி): காஞ்சனா- 898 (சுயேச்சை), லட்சுமி- 852 (திமுக), லதா- 487 (சுயேச்சை).

14வது வார்டு (காங்கிரஸ் வெற்றி): ஆனந்தி- 1330 (காங்கிரஸ்) புனிதா- 1194 (சுயேச்சை), சந்திரா- 648 (அதிமுக).

 15வது வார்டு (திமுக வெற்றி):  சங்கர்- 1488 (திமுக), வேலு- 876 (சுயேச்சை), ரவி- 190 (பாமக).

16வது வார்டு (திமுக வெற்றி): ஆர்த்தி- 1034 (திமுக), வசந்தி- 824 (சுயேச்சை), பிரியா- 241 (அதிமுக).

17வது வார்டு (திமுக வெற்றி): உமாபதி- 936 (திமுக), நரேஷ்- 624 (அதிமுக), ராஜேஷ்- 480 (சுயேச்சை).

18வது வார்டு (சுயேச்சை வெற்றி): விக்னேஸ்வரன்- 1237 (சுயேச்சை), கந்தசாமி- 719 (அதிமுக), ஜெகன்- 464 (திமுக).

Tags : DMK ,Thiruverkadu municipality ,AIADMK ,BJP , DMK alliance wins 12 seats in Thiruverkadu municipality: AIADMK, BJP defeated
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்