ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் 15 வார்டுகளில் திமுக 6, கூட்டணி கட்சியான  காங்கிரஸ் 1 இடத்தை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 15 வார்டுகளில் வெற்றிபெற்றவர்கள் விவரம்.

1வது வார்டு திமுக: லில்லி மாணிக்கம் (திமுக) 244, தனலட்சுமி (சுயே.) 222. தனலட்சுமி பூபாலன் (சுயே.) 147

2வது வார்டு அதிமுக: பிரகாஷ் (அதிமுக) 511, நாராயணன் (காங்.) 218, பாலபிரகாஷ் (சுயே.) 93.

3வது வார்டு திமுக : நர்மதா (திமுக) 722, உஷாராணி (அதிமுக) 428, பிரியா (சுயே) 102.

4வது வார்டு திமுக: நிர்மலா (திமுக) 391, மதிவாணன் (சுயே.) 323, கேசவன் (பாஜ) 90, குமார் (அதிமுக) 87.

5வது வார்டு திமுக: தேவி (திமுக) 447, கண்மணி (சுயே.) 444, சசி (பாமக) 422.

6வது வார்டு திமுக: சீனிவாசன் (திமுக) 431, பூர்ணிமாதேவி (அதிமுக) 106, பாஸ்கர் (சுயே.) 66.

7வது வார்டு பாமக: பார்வதி குப்புசாமி (பாமக) 584, விஜயலட்சுமி (திமுக) 506, அமுதா (சுயே.) 89.

8வது வார்டு திமுக: சாந்தி சதீஷ்குமார் (திமுக) 744, பத்மாவதி (சுயே.) 105, சுதா (அதிமுக) 87.

9வது வார்டு காங்கிரஸ்: செல்வமேரி அருள்ராஜ் (காங்.) 737, குந்தவிதேவி (அதிமுக) 281, தமிழரசி (பாமக) 45.

10வது வார்டு சுயேட்சை: இந்திராணி சுப்பிரமணி (சுயே.) 433, மஞ்சுளா (திமுக) 345, அம்சா (அதிமுக) 155.

11வது வார்டு சுயேட்சை: வீரபத்திரன் (சுயே.) 644, வாசுதேவன் (காங்.) 301, யுவராஜ் (சுயே.) 161. மதன்ராஜ் (அதிமுக) 155.

12வது வார்டு அதிமுக: கோமளா மோகன் (அதிமுக) 136, ஜெயப்பிரியா (திமுக) 101, கணேசன் (சுயே.) 71.

13வது வார்டு சுயேட்சை: இந்துமதி நவீன்குமார் (சுயே.) 658, ஷகிலா குமார் (திமுக) 480, சாந்தி (அதிமுக) 410.

14வது வார்டு அதிமுக: சுதாகர் (அதிமுக) 806, ஜலபதி (திமுக) 498.

15வது வார்டு சுயேட்சை: சாந்தகுமார் (சுயே.) 317, வனிதா (அதிமுக) 231, விக்னேஷ் (பிஎஸ்பி) 132.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3, பா.ம.க 1, சுயேட்சை 4 என இந்த வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

* தலைவர் பதவிக்கு இழுபறி

ஸ்ரீபெரும்பதூர் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க 8 கவுன்சிலர்கள் தேவை. ஆனால், திமுக கூட்டணி கட்சியினர் 7 பேர் உள்ளனர். தற்போது, தலைவர் பதவிக்கு ஒரு உறுப்பினர் தேவைப்படுகிறது. இதனால், சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ள 4 கவுன்சிலர்களில் ஒருவர் ஆதரவை கேட்டு, திமுகவினர் தீவிரமான ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி அதிமுக, திமுக இடையே தனிபெரும்பான்மை இல்லாததால், போரூராட்சியை கைப்பற்றுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Related Stories: