×

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அமமுக

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக, அதிமுக அமமுக கட்சிகள் போட்டியிட்டது. இதில் அமமுக 9 இடங்களிலும், திமுக, அதிமுக தலா 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து 9 இடங்களில் வெற்றி பெற்ற அமமுக, ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

* கோவையில் 67 இடங்களில் பாஜ டெபாசிட் காலி
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96, அதிமுக 3, எஸ்டிபிஐ 1 இடங்களை பெற்றுள்ளது. இங்கு தனித்து போட்டியிட்ட பாஜக 67 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. இதில் அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொகுதியில் உள்ள வார்டுகளும் அடங்கும்.

* மூன்று மாநகராட்சியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் அதிமுக ஒரு இடத்தையும் பெறாததோடு, திருச்சி, கோவை, நாகர்கோவில் ஆகிய 3 மாநகராட்சிகளில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

* மாஜி அதிமுக பெண் எம்எல்ஏ தோல்வி
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி 23வது வார்டில் மாஜி அதிமுக எம்எல்ஏ பொன்சரஸ்வதி போட்டியிட்டார். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் அவர்தோல்வி அடைந்தார். அவர் 839 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புவனேஸ்வரி 1061 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று திருச்செங்கோடு நகராட்சியை கைப்பற்றியது.

Tags : Amamuka ,Orathanadu , Amamuka captured the Orathanadu municipality
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...