சென்னை மாநகராட்சி தேர்தலில் 18 வார்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜ

சென்னை: சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு பக்கம் அண்ணன், தங்கை என வெற்றி பெற்று சென்னை மாநகராட்சி கவுன்சிலராக நுழையப்போகின்றனர். இன்னொரு புறம் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி தான் தங்களின் தோல்விக்கு காரணம் என அதிமுக கூறி வந்தது. இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பாஜ தனித்து போட்டியிட்டதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் அதிமுகவிற்கு எதிராகவும் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், 19ம் தேதி நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜ இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதன்படி, 19வது வார்டு - குமரன்(2731 வாக்குகள்), 33வது வார்டு - சுசீலா  சசிதரன்(952வாக்குகள்), 54 வார்டு - பவன்குமார் (1945 வாக்குகள்), 55வது வார்டு- ரவி(2097 வாக்குகள்), 56வது வார்டு-  கார்மேகம்(2090 வாக்குகள்), 57வது வார்டு - ஜெயராம் சுமந்த்(2202 வாக்குகள்), 59வது வார்டு- அனிதா(1319 வாக்குகள்), 81வது வார்டு- உமாதேவி (2176 வாக்குகள்), 133வது வார்டு- காளிதாஸ்(2304 வாக்குகள்), 164வது வார்டு- ஈஸ்வரி, 165வது வார்டு- நரசிம்மன்(2395 வாக்குகள்), 179வது வார்டு-  ஆனந்தவல்லி(1847 வாக்குகள்), 185வது வார்டு- ஷீலா(1718 வாக்குகள்), 187 வது வார்டு- கிருஷ்ணபிரியா(2321 வாக்குகள்), 112வது வார்டில் - மஞ்சு முத்துராஜ் (2384 வாக்குகள்), 116வது வார்டு- சிவாஜி (2736 வாக்குகள்), 118வது வார்டு- சரஸ்வதி (1716 வாக்குகள்), 119வது வார்டு - கலைச்செல்வி(1248 வாக்குகள்) என மொத்தம் 18 வார்டுகளில் பாஜ வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

Related Stories: