தமிழக கவர்னர் மகள் திருமணம்: ஊட்டி ராஜ்பவனில் நடந்தது

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மகள் திருமண விழா, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழக கவர்னராக இருப்பவர் ஆர்.என்.ரவி. இவரது இளைய மகள் திருமணம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நேற்று காலை நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மெகந்தி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்க கவர்னரின் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேற்றே ஊட்டி வந்தனர். இவர்கள் தங்குவதற்கு ராஜ்பவன் மாளிகை தவிர, மூன்று நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் எடுக்கப்பட்டு இருந்தது.

திருமண விழாவையொட்டி, ராஜ்பவன் மாளிகை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, அலங்கார விளக்குகளால் ஜொலித்தது. ராஜ்பவன் மாளிகையில் தென்னை ஓலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நுழைவு வாயில் பகுதியில் தென்னைஓலைகள் கொண்டு வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டு இருந்தன. ராஜ்பவன் மாளிகை செல்லும் இரு வழித்தடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொள்பவர்கள் தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே ராஜ்பவன் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜ்பவன் மாளிகை மற்றும் மாளிகை செல்லும் வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: