பிரபலமான பாரீஸ் தியேட்டரில் வலிமை

சென்னை: சர்வதேச அளவில் பிரபலமான பாரீசிலுள்ள தி கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் வலிமை படம் ரிலீசாகிறது. அஜித் நடித்துள்ள வலிமை படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வருகிறது. சவூதி அரேபியாவில் இப்படத்தின் சிறப்பு காட்சி, இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு பிப். 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான தி கிராண்ட் ரெக்ஸ் தியேட்டர் பாரீஸ் நகரில் அமைந்துள்ளது. இந்த தியேட்டரில் வலிமை படம் திரையிட உள்ளனர். இந்த தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் படம் இதுதான் என கூறப்படுகிறது. 2,800 பேர் அமரும் வகையில் உள்ள இந்த தியேட்டரில், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1690 ஆகும்.

Related Stories: