புதுப்படங்கள் இல்லாததால் பாலாவிடம் வாய்ப்பு கேட்ட பூர்ணா

சென்னை: மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் வெளியான ஜோசப் என்ற படம், தமிழில் இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதையும் எம்.பத்மகுமார் இயக்கியுள்ளார். ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, இளவரசு நடித்துள்ளனர். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். நேற்று நடந்த இப்படத்தின் விழாவில் பேசிய பூர்ணா, ‘பாலா தயாரிப்பில் நடித்தது குறித்து சந்தோஷப்படுகிறேன் என்றாலும், அவரது டைரக்‌ஷனில் நடிக்க வேண்டும் என்பது என் பல வருட ஆசை. கண்டிப்பாக அவர் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதை நான் பகிரங்கமாகவே கேட்கிறேன்’ என்றார். அப்போது மேடையில் இரு ந்த பாலா, பூர்ணாவை பார்த்து தலையாட்டினார். பிறகு அவர் பேசுகையில், ‘ஜோசப் படத்தை மலையாளத்தில் பார்த்த பிறகு தமிழிலும் பத்மகுமாரே இயக்கட்டும் என்று சொன்னேன். அப்படத்தில் என்னென்ன குறைகள் தெரிந்ததோ அதையெல்லாம் தமிழில் நிவர்த்தி செய்யும்படி கேட்டுக்கொண்டேன்’ என்றார்.

Related Stories: