×

சதுரங்கத்தில் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: சதுரங்க போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த, உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Carlson , Chief Minister praises Tamil Nadu player who defeated Carlson in chess
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...