ஷாஜகான் பிறந்தநாளையொட்டி தாஜ்மகாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி

ஆக்ரா:  ஷாஜகானின் பிறந்தநாளையொட்டி தாஜ்மகாலை சுற்றுலா பயணிகள் 3 நாட்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருகே ஆக்ராவில் உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக இந்த தாஜ்மகாலை உருவாக்கினார். ஷாஜகான் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் உருஸ் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மூன்று நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். இந்தாண்டும் 5வது முகாலய மன்னர் ஷாஜகானின் 367வது உருஸ் விழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமரிசையாக  கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 27, 28 மற்றும் மார்ச் 1 தேதி தாஜ்மகாலை பார்வையிடுவதற்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுவதாக தொல்லியல் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: