×

வெற்றியுடன் தொடங்கிய ஜோகோவிச்

துபாய்: துபாய் டூட்டி ஃபிரி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நோவக் ஜோகோவிச்(34)  இந்த ஆண்டு வெற்றியுடன் தொடங்கியுள்ளார். உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்(செர்பியா). இதுவரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது முதல்முறையாக   தனது சொந்த செலவில் வெளிநாட்டு வீரர்களை வரவழைத்து பெல்கிரேடில் டென்னிஸ் போட்டியை நடத்தினார். அதனால் அவருக்கும் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில்  கடந்த மாதம் மெல்போர்னில்  ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி நடந்தது.

ஆஸி சென்றவரை கொரானா தடுப்பூசி போடவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டனர். அவர், தடுப்பூசி போடுவதும், போடாமல் இருப்பதும் எனது உரிமை என்றவர், ‘என்னை தடுத்தால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் தவிர்ப்பேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் போட்டியாக துபாய் டூட்டி ஃபிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் இப்போது பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் அவர் ஒருமணி 14நிமிடங்களில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியை(19வது வயது, 58வது ரேங்க்) 6-3, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்கியுள்ள ஜோகோவிச் இன்று 2வது சுற்றில் விளையாடுகிறார்.

* ஓஸ்டபெங்கோ முன்னேற்றம்
துபாய் டூட்டி ஃபிரீ  மகளிர் டென்னிஸ் போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்ற லாத்வியா வீராங்கனை யெலனா ஓஸ்டபென்கோ(24) 8 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார்.


Tags : Djokovic , Djokovic started with success
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!