×

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 7,024 ரயில் பெட்டிகளில் 100% உயிரி கழிவறைகள்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட அறிக்கை:  தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளிலும் உயிரி கழிவறைகள் நிறுவி ஓடும் ரயில் பெட்டியில் இருந்து மனித கழிவு வெளியேற்றத்தை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 74 ஆயிரம் லிட்டர் மனித கழிவுகள் ஒவ்வொரு நாளும் ரயில் தண்டவாளத்தில் கொட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மனித கழிவுகள் தண்டவாளத்தில் கொட்டப்படுவதால், தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவாகி வந்தது. தற்போது, இது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயில் 73,078 ரயில் பெட்டிகளில் 2,58,906 உயிரி கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மானாமதுரை-ராமேஸ்வரம் இடையே நாட்டின் முதல் ‘பசுமை ரயில் வழி’ தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில்களிலும் உயிரி கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் உள்ள 7,024 ரயில் பெட்டிகளில் உயிரி கழிவறைகள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4,536 வழக்கமான பெட்டிகளும், 1,392 எல்.எச்.பிபெட்டிகளும் அடங்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 7,024 ரயில் பெட்டிகளில் 100% உயிரி கழிவறைகள்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Purity India ,Southern Railway ,Chennai ,Indian Railways ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...