சென்னை திரு.வி.க. நகர் 72வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பாடகர் கானா பாலா தோல்வி!: வெற்றியை கைப்பற்றினார் திமுக வேட்பாளர்..!!

சென்னை: சென்னை திரு.வி.க. நகர் 72வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பாடகர் கானா பாலா அதிர்ச்சி தோல்வியடைந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் 72வது வார்டில் 51 வயதான கானா பாலா என்கிற பாலமுருகன் சுயேட்சையாக போட்டியிட்டார். கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் கானா பாலா 3534 வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தார். திமுக வேட்பாளரை விடவும் 468 வாக்குகள் அதிகம் பெற்று கானா பாலா முன்னிலை வகித்து வந்தார்.

அவர் வெற்றி பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இறுதியில், திமுக வேட்பாளர் சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 6095 வாக்குகள் பெற்று கானா பாலா 2ம் இடம் பிடித்தார். முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று கானா பாலா முன்னிலை வைகித்திருந்த நிலையில், தற்போது தோல்வியை தழுவியுள்ளார். இதன் மூலம் பாடகர் கானா பாலா 3வது முறையாக தோல்வியடைந்துள்ளார். நான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன் என்பதால் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று கானா பாலா தெரிவித்தநிலையில், 2,208 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

Related Stories: