×

பஜ்ரங் தள் பிரமுகர் கொலை வழக்கு; 3 பேர் கைது: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக போலீஸ் தகவல்..!

பெங்களூரு: பஜ்ரங் தள் பிரமுகர் கொலை வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாநகர் பாரதிநகர் காலனியில் நேற்று முன்தினம் இரவு பஜ்ரங் தள அமைப்ைப சேர்ந்த பிரமுகர் ஹர்ஷா(25) என்பவரை மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஹர்ஷா படுகொலை செய்யப்பட்ட தகவல் காட்டு தீப்ேபால் பரவியது.

மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ெகாலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஷிவமொக்கா மெக்கான் அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று காலை ஹர்ஷா உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது, நூற்றுக்கணக்கான இந்து அமைப்பு தொண்டர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அஜத் நகர் பகுதி வழியாக ஆம்புலன்ஸ் சென்றபோது, திடீரென சிலர் கல்வீசி தாக்குல் நடத்தினர்.

சாலையில் நிறுத்தி வைத்திருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. அஜத்நகரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலம் மீதும் தாக்குதல் நடத்தி தீ வைத்ததால், தர்கா முழுவதும் தீக்கிரையானது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது காந்திநகர், கே.ஆர்.புரம், சித்தையா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கலவரமாக பரவியது. உடனடியாக ஷிவமொக்கா நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், மாவட்ட மற்றும் மாநில ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆர்.செல்வமணி பிறப்பித்ததுடன், உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் வழங்கினார். கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். அப்போது கலவரத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஹர்ஷா கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.

Tags : Bajrang Dal , Bajrang Dal celebrity murder case; 3 arrested: Police say investigations are underway from all angles ..!
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கி...