×

உள்ளாட்சியிலும் முடிசூடிய திமுக! : 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியை கைப்பற்றியது

ஈரோடு: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து, இன்று காலை முதல் ஈரோடு மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை, சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் எண்ணப்பட்டு வந்தது. அணைக்கட்டு பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ச.சிவஞானம் 1999 -ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துக்கொண்டார்.

ஏற்கெனெவே ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. அதன் பின்பு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அதைத் தொடந்து பகலில் சலூன் கடை பணியோடு பிராசாரமும் செய்துவந்தார். தற்போது தேர்தலிலும் வெற்றிப்பெற்றுள்ளார். இது தொடர்பாக ச.சிவஞானம் கூறும் போது, ``சலூன் கடை நடத்தி வந்ததால் இந்த பகுதி மக்களுடன் பழக வாய்ப்பு ஏற்பட்டது. எனவே மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் கட்சி சார்பில் போராடினேன். அதன் பயனாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இன்னும் எனது பணியை சிறப்பாக செய்வேன் எனக் கூறியுள்ளார்.


Tags : DMK ,Erode district ,Kopi , 40 years, Erode, Kopi, Municipality, DMK, win
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு