×

சென்னையில் இன்று முதல் 279 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை:  சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மூர்மார்க்கெட் – ஆவடி – திருவள்ளூர்- அரக்கோணம் இடையே 48 ரயில்களும், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி – மூர்மார்க்கெட் மார்க்கத்தில் 49 மின்சார ரயில்களும், மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி – சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 ரயில்களும்,  சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட்  இடையே 24 ரயில்களும், சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் 17 ரயில்களும், வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே 17  ரயில்களும், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரயில்களும், அதைப்போன்று மறுமார்க்கமாக திருமால்பூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை இடையே 44 ரயில்களும் இயக்கப்படும்.  இதேப்போல், ஆவடி – பட்டாபிராம் மிலிட்டரி – ஆவடி சைட்டிங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில்களும், பட்டாபிராம் – பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் – பட்டாபிராம் மார்க்கத்தில் 8 மின்சார ரயில்களும் என திங்கள் முதல் சனிக்கிழமை வரை  279 மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post சென்னையில் இன்று முதல் 279 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Railway Division ,Chennai Moormarket ,Avadi ,Tiruvallur ,Arakkonam… ,Dinakaran ,
× RELATED சென்னை ரயில்வே கோட்டத்தில் 42 ரயில்...