எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டிலேயே அதிமுக தோல்வி ; வேலுமணி தொகுதியில் திமுக வெற்றி; உடுமலை வார்டில் அதிமுக டெபாசிட் இழப்பு!!

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டிலேயே அதிமுக தோல்வி அடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார். சேலம் மாநகரத்தில் இதுவரை முடிவு வெளியான 15 வார்டுகளில் திமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதே போல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உட்பட 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.உடுமலை நகராட்சி 2வது வார்டில் திமுகவை விட 10 மடங்கு குறைவான வாக்கு பெற்று டெபாசிட் இழந்து அதிமுக.

Related Stories: