நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பெரும்பாலான நகராட்சிகளை கைபற்றுகிறது திமுக; அதிமுக படுதோல்வி

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி,

138 நகராட்சிகள்!!

திமுக கூட்டணி : 125

அதிமுக கூட்டணி : 6

பிற கட்சிகள் :5

* ராசிபுரம் நகராட்சியில் திமுக 8 வெற்றி; அதிமுக 2, விசிக மற்றும் சுயேட்சை தலா ஒன்றில் வெற்றி

* மன்னர்குடி நகராட்சியில் 14-ல் 12 வார்டில் திமுக வெற்றி; அதிமுக, சுயேட்சை தலா 1-ல் வெற்றி.

* மேட்டுப்பாளையம்  நகராட்சியில் 12 வார்டுகளில் 10-ல் திமுக வெற்றி; 2 வார்டில் அதிமுக வெற்றி.

* பொள்ளாச்சி நகராட்சியில் 14 வார்டுகளில் 11-ல் திமுக வெற்றி; அதிமுக 2, சுயேட்சை 1-ல் வெற்றி.

* பட்டுக்கோட்டை நகராட்சியில் 12 வார்டுகளில் 6-ல் திமுக வெற்றி; அதிமுக 4, சுயேட்சை 2 வார்டில் வெற்றி.

* மானாமதுரை நகராட்சியில் 15 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 5 வார்டுகளில் வெற்றி.

* பொள்ளாச்சி நகராட்சியில் 36-ல் 14 வார்டில் திமுக வெற்றி; அதிமுக 2, சுயேட்சை 1 வார்டில் வெற்றி.

* கோவில்பட்டி நகராட்சியில் 24-ல் 17 வார்டுகளில் திமுக வெற்றி; சுயேட்சை 3, அதிமுக 2, அமமுக, பா.ஜ.க. தலா 1 வார்டுகளில் வெற்றி.

* விருதுநகர் நகராட்சியில் 30-ல் 26 வார்டுகளில் திமுக வெற்றி; சுயேட்சை 2, அதிமுக, அமமுக தலா 1 வார்டில் வெற்றி.

* குளித்தலை நகராட்சியில் 24-ல் 21 வார்டுகளில் திமுக வெற்றி; அதிமுக1-ல் வெற்றி.

* லால்குடி நகராட்சியில் 10 வார்டில் 8-ல் திமுக கூட்டணி, அதிமுக, சுயேச்சை தலா 1-ல் வெற்றி.

* ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வெற்றி.

* வேதாரண்யம் நகராட்சியில் 9-வது வார்டில் திமுக வெற்றி.

*  திருத்துறைப்பூண்டி, அம்பாசமுத்திரம், சத்தியமங்கலம், துவாக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது.

* வால்பாறையில்’ 21 வார்டுகளில் 19 இடங்களில் வென்று, நகராட்சியை திமுக கைப்பற்றியது. அதிமுக, சுயேட்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.

*  திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கைப்பற்றுகிறது.

* விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி, மேலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.

Related Stories: