வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி!: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

வேலூர்: தமிழகம் முழுக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சியில் பதிவான வாக்குகள் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவான வாக்குகள் மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றன.

இதேபோல், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் பள்ளிகொண்டா டிரங் ரோட்டில் உள்ள ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றிபெற்றுள்ளார். வேலூர் மாநகராட்சிக்கான 37-வது வார்டுக்கான வேட்பாளராக கங்கா நாயக் போட்டியிட்டார்.

இவர், கடந்த 2002ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராக இருந்தவர். மேலும் திருநங்கைகள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்கை முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். தற்போது திருநங்கை கங்கா நாயக் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: