×

கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூர் பகுதியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது விவசாயிகள் மீது திடீரென மோதிய காரால் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தார் தரப்பில்  உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘விவசாயிகளை கொன்ற சம்பவத்தில் ஆஷிஷ் மிஸ்ரா மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரம் உள்ளது. அவர் ஜாமீனில் வெளியில் இருந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார். அரசியல் அதிகாரம் உள்ளதால் வழக்கையும் தவறான பாதைக்கு எடுத்து செல்வார். அதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ashish Misra , Petition seeking cancellation of Ashish Misra's bail in carjacking case
× RELATED லக்கிம்பூர் சம்பவம்: விசாரணைக்கு...