×

ஐஎஸ்எல் கால்பந்து: லீக் சுற்றுடன் வெளியேறும் சென்னை

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் , தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னையின் எப்சி அணி லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 7வது தொடர் கோவாவில் நடக்கிறது. மொத்தம் 11 அணிகள் மோதும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 20 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.  லீக் சுற்று ஆட்டம் மார்ச் 7ம் தேதியுடன் முடிய உள்ளது. இந்நிலையில் உள்ளூர் அணியான சென்னையின் எப்சி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடி 5வெற்றி, 5 டிரா, 8 தோல்வி என 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அதனால் எஞ்சிய 2 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றாலும்  2முறை சாம்பியன்  பட்டம் வென்ற சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லை.  அதனால் லீக் சுற்றுடன் வெளியேறும் பரிதாப நிலையில் உள்ளது.
அதேபோல் 18, 13 புளளிகளுடன் உள்ள எப்சி கோவா, நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகளும்,   10 புள்ளிகளுடன்,   பட்டியலில்  கடைசி இடத்தில் உள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால்  அணியும் லீக் சுற்றுடன் வெளியேறுகின்றன.
அதே நேரத்தில் முதல் 7 இடங்களில் உள்ள ஐதராபாத் எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி, ஏடிகே மோகன் உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன.

Tags : ISL Football ,Chennai , ISL Football: Chennai leaving the league round
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்