×

அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவை காண உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய் மொழி நாள் வாழ்த்து

சென்னை: அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Tags : India ,Chief Minister ,MK Stalin ,Mother Language Day , We are committed to seeing an equal India for all where all languages are treated equally: Chief Minister MK Stalin's Mother Language Day Greetings
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...