×

'பாஜகவின் ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்ற ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் நடக்கிறது': தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி பேச்சு..!!

இம்பால்: பாஜகவின் ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்ற ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் நடப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இம்பாலில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என தாம் கூறியது ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் நாட்டில் சம உரிமை உள்ளது என குறிப்பிட்ட ராகுல், பாஜகவின் கொள்கைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். பாஜக தொலைநோக்கு பார்வை ஒரே கொள்கை, ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்ளது.

பாஜகவின் பார்வை பிற கொள்கைகள், மொழி, கலாச்சாரங்களுக்கு எதிரான ஆதிக்க மனப்பான்மையுடன் உள்ளது. பாஜகவின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக நாட்டில் யுத்தம் நடப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர் மணிப்பூருக்கு வரும் போது புரிதலுடன் வருவதற்கு மாறாக, ஆதிக்க மனப்பான்மையை நிலைநாட்ட முயற்சிப்பதாக விமர்சித்தார். ஆனால் தாம் பணிவுடன் மணிப்பூருக்கு வரும் போது, இம்மாநில மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.


Tags : Bajga ,India ,Rakulkandi , BJP, Dominance, War, Rahul Gandhi
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை