பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலையின் பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை: கர்நாடகா உள்துறை அமைச்சர் பேட்டி

கர்நாடகா: கர்நாடகாவில் பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை என்றும், ஷிமொகாவில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஷிமொகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகியான 26 வயதான சர்ஷா நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால், ஷிமொகாவில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிமொகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது துர்தர்ஷடவசமான சம்பவம் என்று மாண்டியா எம்.பி. சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார். படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மாநில உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனிடையே பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.           

Related Stories: