சத்தி வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்-கிராம மக்கள் அச்சம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடுமையான  வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு  தீவனம் மற்றும்  குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வனத்தில் உள்ள மரம், செடி கொடிகள்  காய்ந்து கிடப்பதாலும், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி  விட்டதால் தீவனம் மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள் வனத்தை விட்டு  வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று அதிகாலை பவானிசாகர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை  காட்டு யானை பவானி சாகர் அணை அருகே கிராமத்துக்குள் நுழைந்து அங்கு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் பழத்தோட்டத்தில் முகாமிட்டது.  காட்டு யானை ஊருக்குள் நடமாடுவதை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர்.  உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ  இடத்திற்கு  வந்த வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை  கண்காணித்தனர்.

இதேபோல், பண்ணாரி வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு  யானைகள் கூட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில்  ஜாலியாக சுற்றித் திரிகின்றன. வறட்சி காரணமாக காட்டு யானைகள் வனத்தை  விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவதால் விவசாயிகள் மற்றும் கிராம  மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: